Saturday, July 01, 2006

டோண்டு, ஜீவாவின் 'ஆறுக்கான' அழைப்பு !

தலைப்பில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, இப்பதிவு ! கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றிலிருந்து ஒன்பது வரை, பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

ஒன்று:
மருத்துவ மாணவி கௌசல்யாவுக்கு (வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவோடு) உதவி செய்ய முடிந்ததையே, வலைப்பதிவு ஆரம்பித்து, தமிழ்மணத்தில் என்னை இணைத்துக் கொண்டு எழுதியதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய பயனாக / மன நிறைவாகக் கருதுகிறேன்.

இரண்டு:
வலை பதிய முதல் ஊக்கம் தந்த இருவர் தேசிகன் மற்றும் காசி
(நண்பர்கள் சிங்கை அன்பு, சந்திரவதனா, யளனகபக கண்ணன் ஆகியோரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

மூன்று:
என்னை வலை நண்பர்களிடையே சற்று பிரபலம் ஆக்கிய விஷயங்களாக நினைப்பது
1. பல்லவியும் சரணமும் பதிவுகள் (மொத்தம் 32 !)
2. சிறுவயது சிந்தனைகள் பதிவுகள் (மொத்தம் 8)
3. GCT கல்லூரி வாழ்க்கை பற்றிய பதிவுகள் (மொத்தம் 5)


(உஷாவின் உத்தரவுப்படி (மன்னிக்கவும்! வேண்டுகோளுக்கு இணங்க ) வாசகர் விருப்பமாக புதியவர்கள் படிப்பதற்காக, மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! சேர்க்கப்பட்டுள்ளது !

நான்கு:
படித்ததில் பிடித்தவை
1. சுஜாதாவின் எழுத்துக்கள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. ஜெ·ப்ரி ஆர்ச்சர் - எல்லா நாவல்களும்
4. பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்கள்


ஐந்து:
"Controversy" பதிவர்கள் - THY Names are
1. முகமூடி
2. குழலி
3. டோண்டு ராகவன்
4. தமிழினி முத்து
5. மாயவரத்தான்

(இருந்தாலும் இவர்களின் பதிவுகள் ரசிக்கத் தக்கவை !)

ஆறு:
பல முறை அனுபவித்துப் பார்த்த தமிழ் திரைப்படங்கள்
1. காதலிக்க நேரமில்லை'
2. ஊட்டி வரை உறவு
3. தில்லுமுல்லு
4. அந்த ஏழு நாட்கள்
5. முள்ளும் மலரும்
6. அன்பே சிவம்

ஏழு:
பிடித்த வலைப்பதிவர்கள் (Not in any particular order :) )
1. தேசிகன்
2. ஐகாரஸ் பிரகாஷ்
3. ரஜினி ராம்கி
4. பெனாத்தல்கள் சுரேஷ்
5. ரோசா வசந்த்
6. யளனகபக கண்ணன்
7. மாண்ட்ரீசர் (முழுசா எதுவும் புரியாவிட்டாலும் கூட ;) )

(அருண் வைத்தியநாதனையும், PK சிவகுமாரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

எட்டு:
பிடித்த எட்டு தமிழ்ப் பாடல்கள்
1. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
3. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
4. மலரே குறிஞ்சி மலரே
5. பூஜைக்கு வந்த மலரே வா, பூமிக்கு வந்த நிலவே வா
6. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
7. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
8. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா


ஒன்பது:
பார்க்க விரும்பும் இடங்கள்
1. ஹவாயி தீவுகள்
2. வெஸ்ட் இண்டீஸ் (2007 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு போகலாம்னு மனசுலே ஒரு எண்ணம் இருக்கு, பார்க்கலாம்!)
3. நயாகரா (இது நீருக்கு வீழ்ச்சியல்லவே, எழுச்சி அல்லவா என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது !)
4. மொரீஷியஸ்
5. நியுசிலாந்து
6. மசை மாரா (ஆப்பிரிகா)
7. குலு மணாலி
8. டார்ஜிலிங்க்
9. வைணவ திவ்ய தேசங்கள் (106-இல் எவ்வளவு இயலுமோ !)


என்றென்றும் அன்புடன்
பாலா

19 மறுமொழிகள்:

ramachandranusha(உஷா) said...

பாலா சார், உங்கள் பதிவில் மாஸ்டர் பீஸ் என்பது அந்த செஸ் விளையாடுபவர் பற்றியது.
(மன்னனின் கவுரவம், சதுரங்க நடுவிலே- பெயர் சரியா)
வாசகர் விருப்பம் ப்ளீஸ்- அது சேர்த்துவிடுங்க, புதியவர்கள் படிக்கட்டுமே

enRenRum-anbudan.BALA said...

உஷா,
நன்றி ! நீங்கள் குறிப்பிட்டதை சேர்த்து விட்டேன்.

பினாத்தல் சுரேஷ் said...

இந்தச் சிறியேனின் பெயரையும் இந்த சூப்பர் பதிவிலே சேர்த்ததற்கு நன்றி தலை!

ச.சங்கர் said...

அன்புள்ள பாலா....உனக்கு மிகவும் பிடித்த எட்டாவது பாடலுக்கு சின்ன விளக்கம்.." எனது பார்வையில்"

அன்புடன்...ச.சங்கர்

காதல் கணவனும் மனைவியும்.. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும்
அப்படி ஒரு அன்பு..ஆதர்ச தம்பதிகள்..... சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து
விடுகிறார்கள்..


சண்டை, மனஸ்தாபம்,கோபம்,ஊடல் ஒண்ணுமில்லை... விதி ...தலை
எழுத்து......பிரிஞ்சுட்டாங்க


கொஞ்ச நள் கழித்து நிலைமை சீரடைந்து விடுகிறது...பிரிந்த மனைவி கணவனை பார்க்க
ஏங்குகிறாள்...


மனசு கடந்து அல்லாடுது...யோசிக்குது...
அவரை பார்த்தவுடன் என்ன செய்யட்டும்..அப்படியே சந்தோஷத்தில திக்கு முக்கடி
வானத்தில பறக்குறதா...இல்லை அவர் நெஞ்சுல சாய்ந்து அழட்டுமா...இல்லை என்ன
தோணுதோ அதை அப்படியே அவர்கிட்ட சொல்றதா... இல்லைனா பாத்தவுடன்..உங்களை விட்டு
போனதுக்காக என்னை மன்னிச்சிருங்கன்னு கை எடுத்து கும்பிடுறதா? என்ன செய்யிறது
?!! அப்படீன்னு யோசிக்கிறா...


இது மட்டுமா...அது சரி ...நம்ம பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு
யோசிக்கிறோமே...ஆனா அவரைப் பார்த்தால் தனிச்சையாக நம்ம ரீஆக் ஷன் எப்படி
இருக்குமோ...முதல் நாள் கல்யாணமான பொண்ணு மறுநாளைக்கு (முதலிரவு முடிந்த
பின்னால்) புருஷனைப் பார்த்தால் வெக்கத்தில முகம் சிவந்து கையால முகத்தை
மூடிக்குவாளே..அப்படி முகத்தை மூடிக்குவேனோ அப்படீன்னு யோசிக்குறா..அதே
சமயம்..சீ..எனக்கென்ன அவர் புதுசா...எத்தனை வருஷம் சேர்ந்து வாழ்ந்து
பழகியாச்சு..வெக்கமெல்லாம் வராது அப்படீன்னு சமாதானம்...ஆனல் மனசு
சொல்லுது...எத்தனை காலமானாலும் என்ன பரம்பரை பரம்பரையா பெண்ணுக்கு வர்ரது
வெக்கம்...அதெங்க போகப் போகுது அப்படீன்னும் நினைக்கிறது மனசு....


என்ன செய்யலாம் அப்படீன்னு யோசிச்சவா..


அனிச்சையா தன்னை அறியாம இந்த மாதிரி நடந்துருமோ அப்படீன்னு யோசிச்சவ...


என்ன நடந்தா தேவலை அப்படீன்னும் யோசிக்கிறா....


கொஞ்சம் மனசு பாரமெல்லாம் கரையுற மாதிரி அழுதுட்டா தேவலை....இல்லைனா
தெய்வத்தின் சந்நிதில பக்தன் மெளனமா நின்னு இறைஞ்சுவானே....மன்றாடுவானே அது
மாதிரி இந்தக் காதல் சந்நிதியில் நிக்கணும்....அதுதான் சரி அப்படீன்னுட்டு
நினைக்கிறாள்....


*சரி....இதை கவிஞர் கண்ணதாசன் பாட்டில் எப்படி வடித்திருக்கிறார்...... பார்க்கலாமா*


காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் மணந்த பெண்ணைப் போல முகத்தை கைகள் மறைக்குமா..
முறையாய் மணந்த கணவனின் முன்னால் பரம்பரை நாணம் போகுமா


பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது.. அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் நின்றால்....பேசமறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....அதுதான் காதலின் சந்நிதி


*படம்..பாலும் பழமும்...*
*பாடியவர்...P.சுசிலா...*
*நடித்தவர்..சரோஜா தேவி*

Muthu said...

//தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே//

நாம் ஒத்து போறோம்..

ஏங்க, நான் அவ்ளொ கான்ட்ராவர்சி எழுதறனா? :)

நீங்கள் திருத்திய அந்த ஆங்கில வரிகளுக்கு நன்றி பாலா.(strange are the ways human minds function)

அதென்னவோ என் அலுவலகத்தில் உங்க சைட் ஓப்பன் ஆவதில்லை.இது வீட.ஹிஹி

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
அற்புதமான விளக்கம் தந்திருக்கிறய் ! நன்றி.

முத்து,
Controversial-ஆன பதிவுகள் சில இட்டாலும், நன்றாக விவாதம் செய்கிறீர்கள் :)

//அதென்னவோ என் அலுவலகத்தில் உங்க சைட் ஓப்பன் ஆவதில்லை.
//
Instead of http://balaji_ammu.blogspot.com, please try http://balaji%5fammu.blogspot.com

said...

பாலா,
நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி.
தேசிகன்

குமரன் (Kumaran) said...

//வைணவ திவ்ய தேசங்கள் (106-இல் எவ்வளவு இயலுமோ !)

//

எப்போதும் 108 என்று சொல்லியே வழக்கமா, 106 என்று பார்த்தவுடன் புருவங்கள் சிறிது நெரிந்தன. :-) அப்புறம் தான் புரிந்தது ஏன் 106 என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று. நீங்கள் விட்ட 2 திவ்ய தேசங்களுக்குச் செல்லும் முன் இவ்வுலகில் இருக்கும் 106 திவ்ய தேசங்களையும் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்கு (எனக்கும்) வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். :-)

enRenRum-anbudan.BALA said...

தேசிகன்,
வாங்க, நன்றி !

குமரன்,
கருத்துக்கும், தங்கள் பிரார்த்தனைக்கும் நன்றிகள் பல !!! 106 ... உங்களுக்கு புரியவில்லை என்றால் யாருக்குப் புரியும், சீரியஸாவே சொல்றேன் !

கருப்பு said...

பாலா,

அருமையான பதிவு.

டோண்டு வாயைவிடத் தெரியாமல் விட்டு மாட்டிக்கொண்ட சில சமயங்களில் நீங்கள் அங்கு வந்து ஜால்ஜாப்பு சொல்லி அழைத்துச் சென்றதை எல்லாம் நினைத்துப் பார்த்து சிரிக்கிறேன்.

எல்லாம் ஜாதிப் பாசம்.

enRenRum-anbudan.BALA said...

விடாது கருப்பு,
//அருமையான பதிவு
//
நன்றி !

//டடீண்டு வாயைவிடத் தெரியாமல் விட்டு மாட்டிக்கொண்ட சில சமயங்களில் நீங்கள் அங்கு வந்து ஜால்ஜாப்பு சொல்லி அழைத்துச் சென்றதை எல்லாம்
நினைத்துப் பார்த்து சிரிக்கிறேன்.

எல்லாம் ஜாதிப் பாசம்.
//
என் மனதுக்கு நியாயமாகப் படுவதை சொல்கிறேன். நிச்சயமாக சாதிப் பாசமெல்லாம் கிடையாது. ஆனாலும் சிரிப்பதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது !!!
என் எழுத்துக்களிலும் சாதீயம் இருப்பதில்லை. இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

TEST COMMENT !

said...

நல்லது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றால் ஊர்களைப்பற்றி நொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம். கடற்கரைகள் அழகாக இருந்தாலும், சாலைகள் குண்டும் குழியுமாகத் தான் இருந்தன, என் ஜமைகா அனுபவத்தில்!. ஆனால், உள்ளுர் மக்களிடம் கிரிக்கட் பற்றி அளவலாவியது ஒரே ஆறுதல்!

theevu said...

//குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா//

இந்தப்பாடல் இதுவரை கேட்கவில்லை .என்ன பாடல் இது..ஏதும் ஆழ்வார் பாடலா?

மாயவரத்தான் said...

என்னையும் லிஸ்ட்டிலே சேர்த்ததுக்கு நன்றி.


அது சரி.. அந்த 'அஞ்சாவது' லிஸ்ட்டிலே இருக்கிறவங்க, 'ஏழாவது' லிஸ்ட்டிலே கிடையாதா?! :D

Chandravathanaa said...

yநன்றி பாலா.

"காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா..."
இப்பாடல் 80களின் ஆரம்பத்தில் தினம் ஒரு தடவையாவது இலங்கை வானொலியில் ஒலிக்காமல் விடுவதில்லை. குறிப்பாக இன்றைய நேயரில் அனேகமானோர் விரும்பிக் கேட்பார்கள்.

G.Ragavan said...

ஒன்றானவன்
ஊக்கத்தில் இரண்டானவன்
புகழ் தந்த பதிவுகளில் மூன்றானவன்
படித்ததில் பிடித்ததில் நான்கானவன்
பிரச்ச்னைப் பதிவர்கள் ஐந்தானவன்
இன்பத் திரைப்படத்தில் ஆறானவன்
ரசித்த வலைப்பதிவரில் ஏழானவன்
தித்திக்கும் தமிழ்ப் பாட்டில் எட்டானவன்
சென்றிட நவபதிப் பித்தானவன்

பாட்டாவே பாடியாச்சு :-)

enRenRum-anbudan.BALA said...

ஜீவா,
விளக்கத்திற்கு நன்றி. வெஸ்ட் இண்டீஸ் போகவேண்டும் என்ற எண்ணம் நிச்சமிருக்கிறது !

தீவு,
//குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா//
ஆழ்வார் பாடலில்லை ! இப்பாடல் ராஜாஜி அவர்கள் எழுதி, MS அவர்கள் பாடிய ஓர் அற்புதமான பாடல். பதிவர் யாராவது தீவுக்காக "லிங்க்" காட்டுங்களேன் !

மாயீ,
நன்றி ! நீங்க 'ஹிட் லிஸ்ட்'லே இல்லாமலா :)
ஒரு ஆளை 2 பட்டியலிலும் சேர்க்கக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம் ;-) நீங்க வேறே !!!

சந்திரவதனா,
நன்றி ! ரொம்ப நாட்களுக்குப் பிறகு வருகை, வாங்க !
மறக்கக்கூடிய பாடல் வரிகளா அவை ! மேலே ஒரு பின்னூட்டத்தில் சங்கரின் விளக்கத்தை வாசித்தீர்களா ?
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

அன்பின் ராகவன்,
மிக்க நன்றி !

உண்மையாகச் சொல்கிறேன். மிக அருமையாக கவிதை புனைந்துள்ளீர்கள், ஐயா !

என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails